Wednesday, August 25, 2010

பல பின்னலிட்டேன் வலையில்

பல பின்னலிட்டேன் வலையில்
உப்பு காற்று வீசும் தரனும்
மீனவன் மனதில் ஒரு சலனம்
சிறு படகில் ஏறிய தருணம்

வலை தந்தாள் மீனவன் துணைவி
புன்னகையுடன் வழி அனுப்பினால் வினவி
மீனவன் பயணபட்டான் படகை தழுவி
மீன்கள் துள்ளி ஓடி கொண்டு இருந்தது நழுவி
வலையில் இருந்து குதித்து

கடல் நீரில் அவன் படுகு சவாரி தொடர
கிடைத்தது ஒரு பெரிய மீனின் தஞ்சம்
அந்த அழகிய வலையில் மஞ்சம்
அவன் வலையோ மீனுக்கு வஞ்சம்
கிடைத்த மீனோ மிகவும் கொஞ்சம்
ஆனால் பெரியமீன் என்பதால் அதுவே மிஞ்சும்

சந்தோஷத்தில் அவன் மகிழ்ந்தான்
கரைக்கும் ஆனந்த மிகுதியில் திரும்பினான்
உவகையில்  துணைவியை தேடினான்
அங்கும் இங்குமாய் ஓடினான்
தன் இன்பத்தை சொல்ல நாடினான்

கண்ணில் பட்டாள் துணைவி அழகாய்
பெரிய மீன்களை காட்டினான் வேகமாய்
மகிழ்ச்சி கடலில் திளைத்தாள் அவள் நிலவாய் 
ஆனந்தமாய் சென்றது அன்றைய நாள் இனிமையாய்
 
 

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker