Search This Blog

Loading...

Sunday, September 4, 2011

விழித்திரையில்-கரைகிறது

வெள்ளை குளத்தில் கருப்பு வட்ட படகு
வானிலை மாற்றத்தில் சிவந்தது குளம்
கசிகிறது உப்பு நீர் கரைச்சல் அருவியாய்

வீங்குது குளத்தின் கரை அனல் பறக்க
வற்றாது நிறைகிறது கண்ணீர் குளம்
ஊரே வெள்ளக்காடாய் மாறி

தீரா துக்கத்தை புதைக்குது நெஞ்சில்
துரு பிடித்த ஆணியாய்
இவை அனைத்தும் அவள் விழித்திரையில்
நனைந்து கரைகிறது