திடமான ரப்பர் உடம்புக்காரன்
வழ வழ வழவழப்புக்காரன்
உடம்பெல்லாம் அழகிய புள்ளி
ஆனால் கோலம் போட முடியாது
வளைந்து நெளிந்து ஓடுவான்
வயக்காட்டில் மட்டும் வேகமாய்
இறை தேடும் வயலில்
கிடைக்கும் அதற்கு அழகிய படையல்
அது போகும் வழியெல்லாம் புதையல்
அது உண்ணும் அழகிய கலையில்
வயக்காட்டில் விளைச்சலும் கூடும்
சில சமயம் மனிதனுக்கு ஆபத்தும் நேரும்
இதுவோ சாதா மலைப்பாம்பு
மலைப்பான கொளுத்த மலைப்பாம்பு
நகரும் அழகாய் மெல்ல மெல்ல
ஒரு பெரிய மரமே நகருவது போல
அதன் அசைவு கொஞ்ச நேர முடக்கம்
ஒரு செத்த பிணம் போல நடிக்கும்
ஒரு பாறை போல அசைவில்லாமல் கிடக்கும்
அதனை அறியாமல் வரும் அந்த வழியில் ஒரு இறை
அது அறியாது இருக்கும் தனக்கு கிடைக்கபோவது சிறை
இறையின் கவனம் சிதறும் சில நொடிகள்
அதை லாவகமாக கையாளும் மணித்துளிகள்
மலைப்பாம்பு சீறிபாயும் ஒரு அபாயத்துடன்
அந்த இறையின் ருசியில் அது நகராமல்
சிறிது ஓய்வு எடுக்கும் பலத்த வேட்டையில்
கொழுத்த அழுத்த ருசித மலைப்பாம்பு
அடுத்த படையில் வேட்டையை
சில நாட்களிலோ வாரங்களிலோ தொடங்கும்
இப்படியே அதன் வாழ்க்கை செல்லும்
அதன் போக்கில் மனிதனை
வேட்டை ஆடாமல் இருந்தால் சரி
மனிதர்கள் ஜாக்கிரதை இனி
No comments:
Post a Comment