விடுமுறையிலோ பல விதம்
அதில் ஒரு விதம் வார வாரம்
ஒரு வித ஆரவாரம் சனி ஞாயிறில்
வாரத்தின் இறுதியில் வேலையில்
இருந்து கிடைக்கும் விடுதலை
முறை தவறாமல் வரும் விடுமுறை
வருஷ தொடக்கமாம் வருஷ பிறப்பில்
கிடைக்கும் விடுமுறை வேகமாய்
காலண்டரைதேடும் நம் கண்கள்
அடுத்த விடுமுறைகளை பட்டியலிட
கிடைத்தது இதற்கு அங்கு விடை
போகியில் தொடங்கி பொங்கலாய் வந்து
இன்பத்தை தந்து மாட்டு பொங்கலாய்
வரும் விடுமுறை கொண்டாத்தின்
உச்சக்கட்டம் தித்திக்கும் பொங்கலுடன் தானோ
இந்த விடுமுறை போதவில்லையோ நமக்கு
விநாயகர் சதுர்த்தியும் கிருஷ்ண ஜெயந்தியும்
ஆயுத பூஜையும் வந்தால் அதுவும் பலகார
படையலுடன் கிடைக்கும் விடுமுறையாம்
தேசத்தின் பெருமைக்காக நாம் இந்தியன்
என்று சொல்லும் விதத்தில் சுதந்திர தினமும்
குடியரசு தினமும் கொடுக்கும் கம்பீர விடுமறை
விடுதலைக்காக பாடு பட்ட பலரின்
பிறந்தநாளும் காந்தி ஜெயந்தியும்
புனிதாமான விடுமுறையாம்
பட பட பட்டாசுகளும்
புஷ் புஷ் புஷ்வானமும்
சர சர சரவேடியும் பல வண்ணமயமாய்
ஒளிமயமாய் இருக்கும் ஆக்ரோஷமான
இனிப்பு பலகாரங்களின் ஆரவாரத்துடன்
தீபாவளி விடுமுறை
இன்னும் திடீர் திடீர் என்று முளைக்கும்
போராட்ட விடுமுறை இயற்கை சீற்றம் விடுமுறை
கலவர விடுமுறை தீர்ப்பு விடுமுறை
அந்த விடுமுறை இந்த விடுமுறை
மொத்தத்தில் அனைவருக்கும் கொண்டாட்டம்
விடுமுறை என்றால் ரெக்கை கட்டி பறக்குது
மனசு அங்கும் இங்குமாய் ஐ ஐ ஜாலி என்று
வருஷம் முழுசா கொட்டிகிடக்கது விடுமுறை
அள்ளிக்கோ கிள்ளிகோ விடுமுறையை என்று
கூவத்தான் செய்யுது இந்த மனம்
அய்யோ அய்யோ என்ன சின்னபுள்ள தனமா இருக்கு
நமக்கு விடுமுறைய கண்டாமட்டும்
ஏன் இந்த குஷியோ தெரியல
No comments:
Post a Comment