தல தல பூசணியும், வல வல வாழைக்காயும்
தோல் ஒரித்த பட்டர் பீன்சும் பச்சை பீன்சும்
சொர சொர சேனை கிழங்கும் நெரு நெரு காரட்டும்
இன்னும் பல வித காய் கூட்டணியில் நடக்கும்
ஒரு அவியல் தேரோட்டம் தேங்காய் எண்ணெய் மணத்தில்
செய்முறையுடன் விளக்கியுள்ளேன் செய்வதும் எளிது தான் புரிந்தால்
பற்பல காய்கறிகள் எடுத்து அதை லாவகமாய் நறுக்கி
தண்ணீரில் கழுவி அதில் கழிவுகளை ஒதுக்கி
குக்கர் எடுத்து தண்ணீரை தேவையான அளவு ஊற்றி
கழுவிய காய்கறிகளையும் சிறிதளவு உப்பும் சேர்த்து
சிறுது நேரம் வேக விட்டு சில பல விசில் விட்டு
அடுப்பை அனைத்து வேக வாய்த்த தண்ணீரை வடிகட்டி
தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் அரைத்து வைத்து
ஒரு பெரிய கிண்ணத்தில் கட்டி புளித்த தயிர் எடுத்து
அரைத்த கலவை அதில் சேர்த்து வெந்த காய்கறிகளையும் கூடு
அனைத்தையும் நன்கு கலக்கி ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி
தேங்காய் எண்ணெய் சிறிது ஊற்றி கருவப்பிலை கில்லி போட்டு
சிறிது நேரம் கொதிக்க விட்டு பார்த்தால் மணமணக்கும் அவியல் ரெடி
பரிமாற வேண்டியது தான் பாக்கி இதுக்கு எப்போதும் ஏகப்பட்ட கிராக்கி
No comments:
Post a Comment