சட சட மழையே குளு குளு மழையே
பட பட வேகமாய் சுட சுட வந்தாய்
தட தட ஓட்டம் அங்கங்கு ஒதுங்குது கூட்டம்
என் கால்கள் மட்டும் தனியாய் உன்னை தேடும் நாட்டம்
சிடு சிடுவெனவே உந்தன் சத்தம் மண்ணை தொடும் பொழுது
விண்ணில் இருந்து விழுகுது உந்தன் விழுது
மண்ணில் வந்து தந்தாய் அழகிய அமுது
மழையில் நாணி சில நொடி நானும்
எனை மறந்து துள்ளி துள்ளி குதிக்க
சிறு பிள்ளையை போல மாறி போனேன்
சிறு சிறு சொட்டு என் மேல் பட்டு
பரவசம் அடைந்தேன் எனையும் மறந்தேன்
மழையில் அருவியாய் குளித்தேன்
அதனால் இன்புற்று களித்தேன்
என்னை பார்த்து பலரும் இன்று
மழையில் நனைய ஆசை கொண்டு
சடு குடு போட்டு முண்டி கொண்டு
மழையில் ஆட அழகாய் ஓட
நான் மழையை நாட வெகுண்டு ஓட
கொண்டாட்டம் முடிந்தது ஒரு மணி நேரத்திலே
மழையோ நின்றது திண்டாட்டமாய் தான்
மழையும் பஞ்சத்தில் அடிபட தஞ்சமாய்
மறைந்தது குளத்திலும் குட்டையிலும்
கடலிலும் அருவியுளும் அடுத்த படையலுக்கு
No comments:
Post a Comment