Thursday, September 9, 2010

கணபதி சரணம் அனுதினம் வரனும்

கணபதி சரணம் அனுதினம் வரனும்
உந்தன் வரவு எங்களுக்கு புதிய உறவு

யானை முகத்தவனே என்குட்டி மன்னனே
விநாயக பெருமானே என் வணக்கம் அய்யா உனக்கும்

உன் தும்பிக்கையில் ஊற்றுகிறேன் வெள்ளை பாலை
வாரும் அய்யா வாரும் அய்யா வந்தனம் சொல்ல

நீ வருவாய் என்ற நம்பிக்கையில் தந்தனம் சொல்ல
மனமயக்கும் சந்தனமிட்டு சிகப்பு குங்குமமிட்டு

மங்கள தீபமிட்டு வாசனை ஊதுபத்தி பொருத்தி
உன்னை மணமிக்க என் வீட்டுக்கு அழைக்கிறேன் அய்யா

உன் தொந்தி நிறையவதற்காக முந்திக்கொண்டு
செய்து வைத்தேன் பல வித பலகாரங்களை

கொலு கொலு கொலுகட்டையும் வல வல வாழைபழமும்
தித்திக்கும் கொய்யவும் சிகப்பு ஆப்பிலும் கார சுண்டலும்

பர பர பொறியும் பொட்டுகடலையும் பால் பாயசமும்
மொரு மொரு வடையும் படைத்தேன் உனக்கு

வாசலிலே மாவிலை தோரனமிட்டேன் அய்யா
நீ வரவேண்டும் அய்யா வரம் தர வேண்டும் அய்யா

உங்களுக்காக பார்த்து பார்த்து பக்குவமாய் செய்தேன்
உமக்காக படையல் செய்தேன் குவியலாய்

மனம் கோணாமல் ரசித்து ருசித்து மனமார வரம் அருளும் அய்யா
எந்தன் விநாயக பெருமானே சித்தி விநாயகனே போற்றி போற்றி

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker