உனக்குள் தான் நான் இருக்கிறேன்
உன்னோடு தான் நான் பிறந்தேன்
உன்னில் தான் வளர்கிறேன்
என்னை தெளிவாய் உணரந்துக்கொள்
உண்மையை அழகாய் புரிந்துக்கொள்
என்னை நீ ஒளிக்காதே மறக்காதே
வேண்டாம் என்று ஒதுக்காதே
நீ என்னை முழுமையாய் உணர்ந்து
அயராது முயன்றால் உனக்குள்
வளரும் விலைமதிப்பான பொக்கிஷம் நான்
என்னவென்று புரியவில்லையா
அதன் அருமையை நீ இன்னும் உணரவில்லையா
அது உன் திறமை என்னும் செடி
அதில் என்றுமே இல்லை வெறுமை
உனது திறமையை உரிய காலத்தில் பயிர் செய்
அதன் விளைச்சலை அபாரமாய் அள்ளு
உலகுக்கு தெரியும் நீ யார் என்று
உன் திறமையும் என்னவென்று
உன் திறமையை அனுதினமும் வளர்த்தால்
நீ விண்ணைதொடுவாய் சாதனை படைக்க
சோம்பேறி என்னும் அழுக்கை
சலவை செய்து சுறு சுறுப்பாய் கிளம்பு
நீ எந்த வகையிலும் குறைந்தவனில்லை
சாதிக்க பிறந்தவன் என்ற நம்பிக்கையில் கிளம்பு
தோல்வி என்னும் புழுவை உரமாக்கு
உன்சாதனையை பூத்துகுலுங்கும் மரமாக்கு
உன் திறமையை ஒரு புதுவித கௌரவமாக்கு
பின் வரும் உன் பெயரேழுத்தில் அடைமொழியாய்
அழகாய் காட்டு நீ யார் என்று உணர்த்து
No comments:
Post a Comment