உந்தன் தோளிலே நான் சாய்கிறேன்
கொஞ்சம் கிறங்கி கொஞ்சம் மயங்கி
நீ மெல்ல தயங்கி என் காதோரமாய்
ஏதோ மோகமாய் ஒரு வித வேகமாய்
அடங்கா தாகமாய் அன்பே ஆருயிரே என்று
நீ கூற கேட்கையில் எனக்குள்ளாய்
ஒரு புதுவித குளிர்ச்சி அனலாய் பரவ
அது என்னில் அங்குமிங்குமாய் உலவ
உன் விரல் நுனியால் மெல்லமாய்
எந்தன் கூந்தலை நீ தொடுகையில்
உந்தன் கை என்னில் படுகையில்
மெல்லிய வீணையின் இசையை
என் நாணத்தால் உன் வாசிப்பால்
அதன் இசையை உணர்கிறேன்
நீ மீட்டும் அழகை ரசிக்கிறேன்
இன்பம் என்னும் தேன்சுவையாய்
திகட்டாத தித்திப்பாய் என்னை உன்னிலாய்
உனக்குள் நானாய் நானும் நீயுமாய்
நாமாய் மாறுகையில் என்னை ஏதோ
இழுக்கிறதே வலைக்கிறதே மென்மையாய்
உந்தன் காதல் பைந்தமிழ் நான்
கற்று கொள்கையில் அசத்தலாய்
தோன்றுது ஒரு பூரிப்பு கொண்டாட்டம்
No comments:
Post a Comment