Monday, April 25, 2011

நீ உணருவாயா என் கணவா !!!

நான் இங்குமாய் நீ அங்குமாய் வெவ்வேறு இடத்தில்
வேலையின் நிமித்தமாய் நீ வெளியூரில் வசிக்கையில்
நான் உள்ளூரில் புலம்புகிறேன் அழுகையின் இசையில்
சோகமே என் ராகமாய் என் வாழ்கையில் தொடருகையில்
அதை கவிதை நடையில் சொல்ல முயல்கையில்
வார்த்தைகள் வருத்தமும் அழுத்தமும் பின்னி கலக்கையில்
பின்னலாய் வருகிறது வலியான வரிகளாய் உன்னை நோக்கி
நீ உணருவாயா என் கணவா

நீ இல்லா இடத்தில் நான் தனிமையில்
என்னை சுற்றி ஆயிரம் சொந்தம் இருக்கையில்
இன்றும் நான் ஒரு வித வெறுமையில்
உணர்கிறேன் தனிமையை ஒரு வித விரக்தியில்
இப்படி உன் நினைவில் நான் தவிக்கையில்
என்னையே தேற்றிக்கொள்ள முயல்கையில்
ஆறுதலாய் இருக்கிறேன் நம் நினைவு அலைகளில்

நான் உன்னை காணும் நாளை எதிர் நோக்குகையில்
அதிலும் ஒரு ஆனந்தம் தான் எனக்கு வருகையில்
என்னை அறியாமல் உன் மேலிருக்கும் காதலை ரசிக்கையில்
அன்பின் அளவு அளவில்லாமல் அனுதினமும் கூடுகையில்
நாம் இவ்வளவு நாள் பிரிந்திருந்த வலியும் மாறுகையில்
நம் கண்ணீரும் முத்தங்களும் பரிமாறுகையில்
உந்தன் கையால் என்னை நீ அணைக்கையில்
பாசத்தால் என்னை நீ அரவணைக்கையில்
இதன் பின் வரும் அனைத்து நாள்களில்

உன்னை பிரிய எனக்கு தைரியம் இல்லாமல் இருக்கையில்
என்னால் முடியாது இந்த பிரிவு என்று நான் மொழிகையில்
நீ ஆனந்த கண்ணீருடன் எந்தன் பேச்சை கண்டு ரசிக்கையில்
நானும் நாணம் கொள்கிறேன் மெல்ல உந்தன் பார்வையில்

காதல் ரசம் கலக்கட்டும் நம்மில் வெகு விரைவில்
உன் அன்பின் சாறு என்றுமே தித்திப்பான அமுதம்
நீ கிடைக்க என்ன புண்ணியம் செய்தேனோ நான்

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker