Monday, April 25, 2011

சுவைமிக்க முந்திரி பாதாம் பால் அல்வா

ஒரு தடிமான வாணலி எடுத்தேன்
அதில் சிரிது கமகமக்கும் நெய் தடவினேன்

அடுப்பில் நெருப்பு மூட்டி அனலாக்கினேன்
ஒரு லிட்டர் பசும்பால் எடுத்தேன்

அதில் மெல்ல மெல்ல ஊற்றினேன்
சிந்தாமல் சிதறாமல் அழகாய்

வானலியில் தடவிய நெய்யும் எழிலாய்
மிதக்கிறது பசும்பாலில் கலந்து சிறிதளவாய்

மிதமான தீயில் பாலை கிண்டி கொண்டே இருந்தேன்
அது திடீரென்று கொஞ்சம் கொஞ்சமாக

திரளுகிறது ஆட்பரிக்கும் பாலாடைகளாய்
அதில் ஒரு கப் சர்க்கரை அதில் சேர்த்தேன்

கிண்டி கொண்டே இருக்கையில் வந்தது
ஒரு விதமான வாசம் கலந்தது என் சுவாசமாய்

அந்த அழகில் மயங்கித்தான் போனேனோ
பசும்பாலின் மணம் மங்குகிறது மெல்ல மெல்ல

ஆனால் மென்மையான பால்கோவாவின் மணம்
அதில் வந்தது அதிசயமாய் எனக்கு தேவையோ

பால் அல்வா பால்கோவா இல்லை என்று தெளிந்தேன்
அதனால் பொறுமையாய் காத்துகிடந்தேன்

ஒருபுறம் ஒரு குட்டி வாணலி எடுத்து
அதில் மூன்று கரண்டி நெய் ஊற்றி

பொடித்த முந்திரி போட்டேன் பொன்னிறமாய்
அதில் குதித்தான் முந்திரியின் தோழன்


தங்க நாயகன் காய்ந்த திராட்சை கை கொடுக்க
ஆனால் ஏதோ ஒன்று இப்பொது கோபமாய்

முண்டிக்கொண்டு வந்தது சண்டையிட அது
வேறு யாரும் இல்லை பாதாம்பருப்பு நண்பன் தான்

அவனை பாதி பாதியாய் பொடித்தோ
அல்லது துருவியோ சேர்க்கவேண்டும் என்று கேட்டது

கண்டிப்பாக என்னிடம் ஒரு வில்லத்தனமாய்
அவனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்தேன்

இந்த நேரத்தில் பசும பால் மணக்கும் அல்வா பதத்தில்
வர இருந்தது கண்டு தாளித்த நெய்யும்

தங்க திராட்சையும் மணக்கும் முந்திரியும்
பால் அல்வாவில் அழகாய் நீராடினார்கள்

உடனே ஒரு குரல் என்னை நோக்கி வந்தது
இப்பையும் எனைய கண்டுக்கமாற்றியே என்று

அது நம்ம ஜமிந்தார் பாதாம்பருப்பு தான்
அவரயும் பால் அல்வா குளத்தில் நீராட செய்தேன்

அல்வா பதம் வந்தது வறுபட்ட முந்திரியும்
தங்க திராட்சையும் ஜமிந்தார் பாதாம்பருப்புடன்

சங்கமம் ஆனது இந்த அழகிய கூட்டணி
நெய் சொட்ட சொட்ட கிடைத்தது அல்வா
பாதாம் முந்திரி போட்ட பால் அல்வா

நாக்கில் ஊருது எச்சில் இதை உண்ண
இதோ தருகிறேன் நண்பர்களே உண்டு மகிழுங்கள்

எப்படி உள்ளது தித்திப்பான நெய் மணம் மாறாத
முந்திரி பாதம் திராட்சை அல்வா

பின் குறிப்பு இதில் ஜாதிக்காயும் ஏலக்காயும்
கூட சேர்த்துக்கொள்ளலாம் மணம் ஆளையே மயக்கும்

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker