வேணி என்ற கண்மணி
என் மனதில் நின்ற பொன்மணி
கவியில் தேர்ந்த பெண்மணி
விண்ணிலே அழகு முழுமதி
மண்ணிலே என்றும் வெண்மதி
கவி சொல்லும் அழகிய திருமதி
கண் அழகியே கவி அழகியே
தங்கசொல் புவி அழகியே
அந்தாதியின் அந்தமே அதியே
சோலை அமைத்து இந்த
சுட்டி அணில் போலே
பல பூங்குயில்களும்
மயில்களும் வரவு தர
பூத்த வைர மலரே
சித்தமும் தமிழ் சந்தமாய்
நித்தமும் தமிழ் அடுக்காய்
பல வகையான படைப்பும்
தந்தாய் இன்னிசை தென்றலே
இதம் தரம் காண இசையை
தமிழில் இனபத்தை பொருத்தி
உன்னை அதற்காக வருத்தி
தந்தாய் சிரத்தை எடுத்து
அழகிய தமிழ் பாடல்களும்
உங்கள் எண்ணற்ற படைப்பும்
அதன் அனுபவபூர்வ அமைப்பும்
அளவில்லா பொக்கிஷமாய் வீற்று
விண்ணை தொட்டது சாதனையாய்
உங்களிடம் நான் கண்ட அன்பும்
உங்கள் அற்புத படைப்புகளில்
நான் கொண்ட காதலும்
நம் நங்கூர நட்பின் வளத்தை
உரமேற்றும் ரகசியம் ஆகுமாம்
சொல்ல வார்த்தைகள் இருந்தும்
திணறுகிறேன் சில சமயம்
அழகிய சிந்து பாட
இந்த சந்த நண்டு
விழிபிதுங்கி ஓட வரிகளுக்குள்
ஒரு தேன் தேடும் வண்டாய்
இந்த சுண்டு சுட்டி பொண்ணு
சித்ரா என்ன செய்ய உங்கள் நட்பின்
ஆழத்தையும் நீளத்தையும் விவரிக்க
என்றும் நட்பு தொடர வேண்டுகிறேன்
வரமாய் உங்களிடமும் இறைவனிடமும்
No comments:
Post a Comment