மாலை நேர வேளை பசிக்குது எனக்கு
அதுவும் மொரு மொரு பலகாரம் வேண்டும்
கொஞ்சம் காரம் தூக்கலாய் கேக்குது
என் மனசு சொல்லுது அதிரடியாய்
நொடியில் தயாரிக்கும் கரகர மொறு மொரு
துக்கடா இருக்கு என்ன கவலை இனி
கிடைத்தது ஒரு யோசனை ருசித்து சாப்பிட
மொரு மொரு துக்கடா சாப்பிடலாம் நேக்கா
காரமும் இருக்கும் கொஞ்சம் ஷோக்கா
இரண்டு கப்பு மைதா மாவு எடுத்தேன் வேகமாய்
கொஞ்சமாய் போட்டேன் மணக்கும் பெருங்காயதூளை
அரை டீ- ஸ்பூன் மிளகாய் தூள்
தூவினேன் அதில் மெல்ல மெல்ல
வேண்டும் என்றால் காரம் இன்னும் தூக்கலாய்
கூட்டிக்கொள்ளலாம் விருப்பத்திற்கு ஏற்ப
தேவையான அளவு பொடித்த உப்பும்
இரண்டு டீ- ஸ்பூன் வெண்ணையும் சேர்த்தேன்
இல்லையேல் நெய் சேர்த்து கொள்ளலாமே
அதற்கு பதிலாய் தெளிவாய் நாம்
இப்பொது தண்ணீர் சேர்த்தேன் கொஞ்சமாய்
சப்பாத்தி மாவு பதத்தில் நான் பிசைய பிசைய
என் நாக்கு ஊறியது ருசியை சுவைக்க ஆவலாய்
இப்பொது சப்பாத்தி உருண்டை
தயார் செய்தேன் மைதா கலவையில்
ஒருவித கைவித்தை நான்
செய்கையில் மனம் பறக்குது
சீக்கரம் செய்யடி பெண்ணே
என்று தான் துடிக்குது மெதுவாய்
ஒவ்வொரு உருண்டையும்
உருட்டி நான் தேய்க்க தேய்க்க
சப்பாத்தியில் கத்தி வைத்து
எனக்கு புடித்த வடிவில் கோடிட்டேன்
சதுர வடிவில் நான் அதிரடியாய் வெட்டி
வெய்த்துவிட்டேன் அழகாய் இருந்தது அது
இப்பொது அடுப்பில் நெருப்பு மூட்டி
இரண்டு கரண்டி எண்ணெய் எடுத்து
பொரிக்கும் அளவு ஊற்றி மிதமான
தீயில் வெய்தேன் பக்குவமாய்
எண்ணையும் காய்ந்தது வேகமாய்
குதிக்க தயாரானார்கள் மைதா படை வீரர்கள்
நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டுதான்
எண்ணெய் குளத்தில் குதித்தார்கள் உப்புவதர்க்கு
உப்பி நிறம் மாறினார்கள் மெல்ல மெல்ல
அந்த அழகை நான் என்னவென்று சொல்ல
சிறிது திருப்பி போட்டேன் நான் அழகாய்
முழுதாய் வெந்ததும் மொரு மொருப்பு வந்ததும்
எடுத்தேன் மொரு மொரு கமகமக்கும் துக்கடா
துடுக்குத்தனமாய் தயார் ஆனது
சுட சுட காப்பியுடன் காரமான
மொரு மொரு துக்காடவும்
இதை எத்தனை நாளும் சேமித்து
வைத்து சாப்பிடலாம் கெட்டு போவதற்கு
வாய்ப்பில்லை என்று கூறலாம்
15 நாள் வரை வெய்த்து கொள்ளலாமே
No comments:
Post a Comment