அழகு மங்கையும் பேரழகாய் ஒளிர்வாள்
பாரம்பரிய சேலை என்னும் ஆடை உடுத்துகையில்
கூரை சேலையோ இல்லை நூல் சேலையோ
பட்டு சேலையோ இல்லை எந்த சேலையோ
விலை குறைந்த மலிவான சேலையோ
இல்லை விலை மதிப்பான சேலையோ
எந்த சேலை ஆனாலும் ஒரு பெண்ணை
அவளின் பெண்மையின் தன்மையை கூட்டி
அழகு மெழுகு பொம்மையாய்
மின்னும் தெய்வீக கலையாய்
வையகத்தில் பூத்த பூவாய்
வானின் தேவதையாய் காட்டும்
அவள் உடுத்தும் சேலை
அழகுக்கு அழகு கூட்டும்
அவள் புன்னகையோ அதனில் கலந்து
ஒரு வித சிலிர்ப்பூட்டும் குளிர்ச்சியாய்
சேலையின் அழகு பெண்ணை
அடைகயிலே அதன் பெருமை கூடுகிறது
இல்லையேல் அதுவும் ஒரு காட்சி பொருளே
துணிக்கடையில் என்றென்றுமே
No comments:
Post a Comment