Monday, April 25, 2011

தலைபொங்கல் சீர்- பொங்குது சந்தோஷம்

தலை தூக்குது தூளாய் என் வீட்டில் தலை பொங்கல்
இன்பம் சேர்ந்தது மேலாய் அதன் அழகிய பங்கில்


வந்தனர் என் பெற்றோர் பொங்கல் சீர்கொண்டு
வீர நடையாய் சூர நடையாய் மாமியார் வீட்டுக்கு
கையில் பலவித பொருள்கள் சுமந்து கொண்டு
அதை வாங்கி தரையில் வெய்தேன்
பெரிய தாம்புல தட்டு எடுத்து
அதில் அடிக்கினர் அடுக்கடுக்காய்
பலவித பழங்களும் காய்கறிகளும்
இனிப்பு கிழங்கும் தலை தூக்கி பார்த்தது
பாசிபருப்பும் கடலை பருப்பும் ஆடியது
ஒரு வித நாட்டியம் என்னை நோக்கி

அடுத்து கொடுத்தார்கள் கனத்த பெரிய பானை
அது தான் முக்கியமான தலை பொங்கல் பானை
பொங்கல் கரண்டியின் கணம் தாங்காமல் அத்தை
நகைச்சுவையும் அளித்தார் இந்த கரண்டியை
மூன்று பேர் தூக்கவேண்டும் போலும் என்று கூறினார்
அனைவரும் அதை கேட்டு சிரித்தனர்
மற்றவர்குளும் கரண்டியை தூக்குவதை
ஒரு சாதனையாய் செய்ய முயன்றனர்

பொங்கல் சீருகான சாமான்களும்
அடுக்கினார் என் அம்மா சீரான வரிசையில்
வெண் பொங்கலுக்கும சக்கரை பொங்கலுக்கும்
சீரகம் மிளகு முந்திரியும் கிஸ்மிஸ் பழமும்
ஏலக்காய் தூளும் கமகமக்கும் நெய்யும்
மயக்கும் வெள்ளை பச்சரிசியும்
தித்திக்கும் மண்டை வெல்லமும்
கதம்பமான பூவும் மணக்கும் மல்லிகையும்
மங்கலமான சந்தனம் திடமான கரும்பும்

காய் கறிகளின் அணிவகுப்பை சொன்னால்
மலைப்பாய் போகும் உங்களுக்கு
அவரைக்காய் பீன்ஸ் காரட் பூசணி
முட்டைக்கோஸ் காளிப்லோவேர்
பச்சை பட்டாணி பச்சை மொச்சையும்
பட்டர் பீன்சும் சோயா பீன்சும்
இஞ்சி பச்சை மிளகாய் புதினா
கொத்த மல்லி வாழைக்காய்
உருளை கிழங்கு சேனை கிழங்கும்
சேப்ப கிழங்கும் வெங்காயம் தக்காளி
என்று இன்னும் எண்ணில் அடங்கா
காய்கறிகள் மற்றும் பலவித பலகாரங்கள்
மாமனார் மாமியார் சொனார்கள்
அம்மா !!! இப்பயே கண்ண கட்டுதே
சாமி என்று பிரிட்ஜில் இடமும் போதவில்லை
இவை அனைத்தையும் அடுக்க

என்னையும் என்னவரையும் வாழ்த்தினர் என்
பெற்றோர் பொங்கல் சீர் கொடுத்த கையுடன்
பூரித்தது பொங்கல் சீர் பூரித்தோம் நாங்கள்
இன்பத்தில் தலை பொங்கல் கொண்டாட தயார் ஆனோம்

தலை பொங்கல் மற்றும் பொங்கல்
வாழ்த்துக்கள் அனைவருக்கும் மனதுருக சொல்கிறேன்

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker