Tuesday, January 13, 2026

நான் சர்க்கரை பொங்கலான கதை





நான் சர்க்கரை பொங்கலாகதை


அக்கறையாய் சொல்லுகிறேன் நான்

சர்க்கரை பொங்கலான என் கதையை

கேட்க தயாரா நீங்கள்


மண்பானையாம் பொன் பானை நான்

என் பானையில் மங்கலம் தரும் தெய்வீக

நறுமண மஞ்சலிட்டு ஜொலிக்கும் குங்குமமிட்டு

மணமணக்கும் பூவால் மஞ்சள் கிழங்கால் அலங்கரித்து

என்னை மென்மேலும் அழகூட்டி மெருகேற்றி


தங்க அனலிட்ட மண் அடுப்பில் மண்பானையான

என்னை அதன்மேல் வைத்து சலசலக்கும் நீர் எடுத்து

உளையாய் கொதிக்க வைத்து


பால் போன்ற வெண்மை நிறம் கொண்ட

பச்சரிசியான என்னை உள்ளே குதி என்று அன்பு கட்டளையிட

நானும் கொதிக்கும் நீரில் உள்ளே குதித்தேன்


பின் கொதித்து துள்ளி துள்ளி விளையாடி கொண்டிருந்தேன்

அப்போது நான் சந்தோஷ தாண்டவத்தில் பொங்கி எழுந்தேன்

அழகாய் பானைக்கு வெளியே

பொங்கி பொங்கி வழிய ஆரம்பித்தேன் நான்


மக்கள் அனைவரும் குலவையிட்டு

பொங்கலோ பொங்கல் என்று கூவி ஆரவாரமிட்டனர்

கிழக்கு நோக்கி பொங்கி எழுந்தேன்

கதிரவனை கண்டு நன்றி சொன்னேன்


நான் கொதித்து வேகையில்

நன்கு முழுமையாய் இதமாய்

பதமாய் வெந்து வருகையில்

தனிமையில் துடித்தேன்

என்ன தனிமை ஏன் இந்த வெறுமை

என்று தெய்வத்திடம் வினவினேன்

என் வினாக்காவிடையை உடனே பெற்றேன்


ஜொலிக்கும் ஆட்பறிக்கும் தங்க நிறம் கொண்ட

ஒன்று காட்சி அளித்தது

அது வேறு யாருமல்ல சாட்சாத்

தித்திப்பான மண்டைவெல்லம் தான் அது

சற்று வந்து எட்டி பார்த்து

இதோ நான் இருக்கிறேன்

உன்னோடு இணைந்து சுவை கூட்ட

என்று சொல்லி கொண்டே

உள்ளே குதித்தது என்னுடன்

லாவகமாய் இணைந்தது


மகிழ்ச்சி தாளவில்லை எனக்கு இந்த நிகழ்வு நடக்கையில்

அப்படியே இணைந்தோம் பின்னி பிணைந்து

நன்றாய் கலந்தோம்


அப்போது ஒரு அசரீரி கேட்டது

உங்கள் இணைப்புக்கு இதோ நான் தரும்

இன்னும் ஒரு சில பரிசு என்றது

அதை கேட்டு எங்களுக்கு ஆச்சரியம் தாளவில்லை


அது வேறு யாருமல்ல மணமணக்கும்

ஏலக்காய் தான் அது உங்களை

நாள் முழுவதும் மணம் கமல செய்யும்

என்றது


அது மட்டுமல்ல உங்கள் இணைப்பிற்கு

தெய்வீக நறுமணம் கூட்ட

அதிரடியாய் இறங்குகிறது ஒரு சிட்டிகை

பச்சை கற்பூரம் என்னும் செல்ல குட்டி என்றது


எங்களுக்கு இதை கேட்டதும் ஆனந்தம்

பேரானந்தம் பச்சரிசியான

எனக்கும் மண்டை வெல்லத்துக்கும்


இந்த கூட்டணியால் நாங்கள் இப்போது

நால்வராக கலந்தோம்

ஆனால் ஏதோ சில விஷயம் குறைந்தது போலே

உணர்ந்தோம் அதனால் ஒரு முடிவு எடுத்தோம்


இதற்கு தீர்வாய் தெய்வத்திடம் ஏதேனும்

வரமாய் கேட்க வேண்டும் என்றது பச்சரிசி


அப்போது ஏலக்காயும் பச்சைக்கற்பூரமும்

நாம் இன்னும் அதிகமாய் மணம் கமல மற்றும்

ருசி கூட்ட வேண்டும் அதனால் இதற்காக

தவம் செய்வோம் என்றது


எனவே நாங்கள் நால்வரும் தவத்தை

தொடர்ந்தோம் நினைத்தது போலே

பலனும் கிட்டியது தெய்வத்தின் காதிலும் எட்டியது


உங்களுக்கு என்ன வரம் வேண்டும்

என்று தெய்வம் கேட்க

உடனே நாங்கள் இன்னும் ருசி கூட்ட

நறுமணமும் கம ஏதேனும்

வழி உள்ளதா அத்தகைய வரத்தை

தாருங்கள் என்றோம் நால்வரும் ஒன்றாய்


உங்கள் ஒற்றுமையை கண்டு மனமெச்சி போனேன் நான்

சரி இதோ தருகிறேன் நீங்கள் விரும்பிய வரத்தை தருகிறேன்

ஆளை சுண்டி இழுக்கும் மணமணக்கும்

பசு நெய் சுந்தரியும் ,கட்டு மஸ்தான

முறுக்கு முந்திரியும் மற்றும் இறுதியாய்

குருதிக்கு மெருகேற்றும் திராட்சை இளவரசியும்

உங்களோடு இணைந்து நறுமணம் கூட்டட்டும்

அதை மட்டும் செய்யாமல்


அதற்கும் மேல் ஒரு படி ஏறி ருசியும் கூட்டி

உடம்புக்கு பலமும் கூட்டி அனைவரின்

நாக்கிலும் நெய் வடிசலோடு கரைந்து

உங்களோடு இணைத்து ருசியை கூட்டி

பசியை தூண்டிவிடட்டும் உங்கள் கலவையில்

தெய்வீக மணம் கூடும் என்றது தெய்வம்


பொங்கல் பானையில் உருவாகி கருவாகி

சர்க்கரை பொங்கலாய் மாறி உங்களோடு

ஒன்றோடு ஒன்று வரிசையாய் இணைந்த பிறகு

தெய்வீக மணம் கமல்வீர்கள்

அனைவரும் சர்க்கரை பொங்கலாய்


தெய்வத்துக்கு பிடித்த உணவாய் மட்டும் அல்லாது

ஒரு வரபிரசாதமாய் அனைவரிமும்

ருசியாய் மற்றும் மணம் கமல்வீர்களாக

அத்தோடு நில்லாமல் இயற்கைக்கும் ஆதவனுக்கும்

மனிதர்களுக்கும் உங்கள் வரவு இனி அவசியம் என்றும்

தெய்வத்துக்கும் தலை சிறந்த முதன்மை

படையல் தெய்வ பிரசாதமாய் திகழ்வீர்களா

அதனால் தான் உங்கள் படைப்பை இங்கு உணர்த்துகிறேன்

நான் என்றது தெய்வம்


இப்படித்தான் சர்க்கரை பொங்கல் தான் உருவான

கதையை சொல்லி முடித்தது எளிய நடையில்


அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


By

SoniyaJaraiaka

4 comments:

Anonymous said...

பொங்கல்களை பற்றி அருமையான செய்தி 🙏

Anonymous said...

மிக்க நன்றி 🙏🙂

Anonymous said...

நானே பொங்கலாக மாறிய தருணம்.. நல்ல முயற்சி.. அருமை

Anonymous said...

மிக்க நன்றி 🙏🙂

Protected by Copyscape Online Plagiarism Checker