சாபம் வரமா இல்லை வரம் சாபமா
தீரா மகிழ்ச்சி அதனால் ஏற்பட்ட நெகிழ்ச்சி
பல தீயசூழ்ச்சி இப்பொது அடைந்தது வீழ்ச்சி
அதன் பொருட்டு வந்தது ஒரு வித கிளர்ச்சி
அதுவே ஒரு நல் அழகிய மறுசுழற்சி
இது புது வித பாராட்டத்தக்க நல்முயற்சி
இது தூய தொண்டு ஆனால் மறுமலர்ச்சி
நாம் நல்வழியில் நல்லோர்க்கு இணங்கினால் நல் அகச்சி
அழியும் நம் முதுமை என்னும் முதிர்ச்சி
இதுக்கு தேவை அயராத நல்முயற்சி
நமக்கு தேவை தன்னலமற்ற பயிற்சி
தடுக்க வேண்டும் நம்மில் இருக்கும் தப்பான உணர்ச்சி
அப்போது தான் கிடைக்கும் வரம் என்னும் மலர்ச்சி
இதுவே நல் வளர்ச்சி நம் வாழ்க்கை பயண பாதையில்
இத்தனை கூறப்பட்ட ச்சிகள் வரிகளாய் சேரும் பொழுது
சாபம் கூட வரம் ஆகும் வரமாய் மாறும்
சாபம் வரமா இல்லை வரம் சாபமா
எழுதியவர்
சித்ராஜானகிராமன் (சோனியா ஜரைக்கா )
3 comments:
அன்பாக பழகினால் எல்லாம் நல்லது நடக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் எல்லோருடன் நன்றாக பேசினால் போதும் சாபம் வராமல் இருக்கும்
இவ்வளவு 'கேட்சியா' சொன்னதுக்கு வாழ்த்துகள்.
Nalla pathivu… 👍👍👍
Post a Comment