Friday, March 20, 2026

மகிழினி கலிகிலி கல்கி அவதாரம்

 மகிழினி கலிகிலி கல்கி அவதாரம் 



கலியின் முகத்திரை கிழிக்கும் 

நாள் நெருங்கியது 


அந்நிய வேறு கலப்பின துர்சக்தி செயலிழந்தது நொடிந்தது 


நன்மையின் தர்மத்தின் ஆதிக்கம் கூடியது 


தீயசக்தியின் ஆயுள் காலம் சுருங்கியது 


மறைவாய் தாக்கிய கெட்ட துர்சக்தி

இன்று வேரோடு அழிந்தது 


இருள் போன்ற நிழலாய் சூழ்ந்த கருப்பு வெள்ளை மேகம் கலைந்தது 


ஒரு காலத்தில் கிரகணத்தில் ஆதிக்கம் செலுத்திய தீய சக்தி இப்போது தன் முழு சக்தியையும் இழந்து பலவீனம் ஆனது 


தீய சக்தி தன் பார்வை இழந்து புத்தி இழந்து பலம் இழந்து பலவீனம் ஆனது 


நத்தை வேகமாய் மெல்ல மெல்ல தன் வாழ்நாளை கழித்து கொண்டு இருக்குது தீய சக்தி தண்டனை என்னும் சுழலில் சிக்கி 


காலத்தின் வேகம் இனி நல்லோர்க்கு வேகமும் மிதமாயும் சமநிலையிலும் நகரும் 


தீயசக்தி உறைந்து முடமாய் தன் வாழ்நாளை தண்டனையாய் கழித்து கொண்டு இருக்கும் 


தெய்வத்தின் தீர்ப்பும் நல்லோரின் மற்றும் பத்தினியின் பக்தர்களின் வாக்கும் நிச்சயம் பலிக்கும் 


நிரந்தரமில்லா உலகில் நல்லோர் வாழ்ந்து நிலைக்கவும் தீயவை வீழ்ந்து தோர்க்கவும் வேண்டும் என்று புது தீர்ப்பு எழுதப்பட்டது


தெய்வ சக்தி அனைத்து உலகத்திலும் பரவி வளர வேண்டும் 


நல்லசக்தி தெய்வீக சக்தி 

ஒவ்வொருக்குள்ளும் வேரூன்ற வேண்டும் 



நல்ல குலத்து பெண் என்பவள் கேலிகூத்து அல்ல 


அவள் தாக்கப்படும் பொழுது 

அவள் அவமானப்படுத்தப்படும் பொழுது 


ஒரு புனித உன்னத சக்தி உயிர்தெழும் அது நவ துர்ககாளி என்னும் உன்னத சக்தியாய் பிறக்கும் 


அதில் அஷ்டலக்ஷ்மிகளும் அஷ்டவாணியும் அயிக்கியமாகி 

சாந்த ரூபமாய் மூன்றும் கலந்த 


சித்ர வித்யா துர்க லக்ஷ்மியாய் மகிழினி அவதாரம் எடுத்து


கலிபுருஷனுக்கும் அவன் வம்சத்துக்கும் கலி கிலி ஏற்படுத்தி ஆனந்த பரத கதகளி தாண்டவம் ஆடுவாள் 


ஒவ்வொருவர்க்குள்ளும் உள்ள தீமை பாவம் என்னும் இருள் அகற்றி நன்மை புண்ணியம் என்னும் அணையா தீபம் ஏற்றுவாள் 


எல்லையற்ற ஆற்றல் மூலமாய்

தர்மத்தை நிலைக்க செய்வாள் 


நல்தேவிகள் நல்தேவர்கள் நல்லோர்கள் தலைத்தோங்கும் காலம் இது 


அதர்மம் தலை தொங்கிவிடும் தீயவர்கள் கொட்டம் அடங்கிவிடும்


தீயவைகள் செய்த பாவம் நம்பிக்கை துரோகம் தீயவைகளையே கொள்ளும் உயிர்க்குக்கொல்லி வைரசஸாய்

மாறி தீயவைகளை கொடூரமாய் தின்றுவிடும் 



தேவர்களின் அருளால் ஆசியால்

தேவிகளின் வம்சத்தில் தேவதையின் அம்சத்தில் ஒரு பெண் பிறவி எடுத்தாள் 


 அவள் தான் சித்ரிக்கா மகிழனி புன்னகையினி தேவி 


முரண்டு பிடிக்கும் உக்கிற அக்கிரமம் செய்யும் அரக்க துஷ்டர்கள் கூட்டத்தை வதம் செய்தாள் புன்னகையினி சித்ரிக்கா தேவி 

மகிழிநியாய் ஆனந்த தாண்டவம் ஆடி


தீரா சாபத்தை தீர்த்து விமோச்சனம் அளித்தாள் 


பின் ரோஜாவும் தாமரையும் கலந்த பூவாய் மலர்ந்தாள் 


வண்ணமயமான உலகம் படைத்தாள் 

 

உலகத்தின் சமநிலையை சீராக்கினாள் 


அரக்க ராட்சச தீயவர்களை வதம் செய்து 


அந்நிய துர் துஷ்டர்களை சம்ஹாரம் செய்து 



காலத்தின் சாவியை இறைவனிடமே 

கொடுத்து தன் முதல் அவதாரத்தை முதல் அடியாய் எடுத்து வைத்து முன்னேறினாள் மகிழினி தேவி என்னும் அவதாரம் தேவி ராணி 


சூர்யனும் சந்திரனும் தங்கமாய் மின்ன


நல்லோரின் கண்ணீருக்கு நல்ல நீதி கிட்டியது 


கல்கி என்னும் காலம் சார்ந்த அவதாரம்


கழிக்க வேண்டிய தீயவைகளை கழித்து கிழித்து தனித்து பிரித்து 


நல்லவைகளை விதைத்து முளைக்க வைத்து ஆழமாய் வேரூன்றி தர்ம பாதையில் பயணித்தது காலம் 


சித்ர மகிழினி வருகை கல்கி அவதாரத்தின் ஒரு உன்னத புண்ணிய துளி 


ஒவ்வொருவர்குள்ளும் மகிழினி என்ற மூன்று தேவியின் அம்சம் சித்திரமாய் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது 


நாம் நம்மில் இருக்கும் தீய

 இச்சசைகளை தீய எண்ணங்களை தீய பார்வைகளை களைந்து 


நன்மை நேர்மை புனிதம் புண்ணியம் ஞானம் பக்தி பணிவு என்னும் விதைகளை விதைத்து கற்பகவிருச்சமாய் வளர்க்க வேண்டும் 


கல்கியின் ஒரு சிறிய அங்கமாய் 

ஒரு புனித துளியாய் இருக்க ஒவ்வருவரும் ஒரு முதல் அடி எடுக்க வேண்டும் 

எழுதியவர் 

சித்ராஜானகிராமன் (சோனியா ஜரைக்கா )

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker