Thursday, August 5, 2010

என்ன பாவம் செய்தேன் நான் !!!

என்ன பாவம் செய்தேன் நான்  !!!
 
படிப்பை துலைத்தோம் ஏனோ !!!
 

அது கானல் நீர் தானோ!!!

விளையாட்டை மறந்தோம்
 

அது எட்டா வெண்ணிலவோ !!!

மிற்றவர் போல் பல நிற ஆடை இல்லை
 

அது ஒரு  ஏக்க மழையோ!!!

உடுத்த ஒரு புத்தாடை கூட  இல்லை
 

அது ஒரு துக்க நதியோ!!!

படிக்க ஆசை ஆனால் பணம் இல்லை
 

அது கையில் அகப்படாத தென்றலோ !!!

உண்ணவே நேரம் இல்லை
 

கையில் எட்டியும் வாயில் புகவில்லையே !!!

படிக்கவும் வாய்ப்பில்லை
 

இருக்கவே இடம் கிடைபதே பெரிதோ !!!

தூங்க கூட நேரம் இல்லை
 

துக்கமே எங்கள் சிகர மலையில் தஞ்சமோ !!!

வலியில் நாட்கள் கண்ணீரில் வாழ்க்கை
 

என்று மாறும் இந்த துரோகம்!!!

கடவுளே ஏன் எங்களை படைத்து வதைத்தாய்
 

வேண்டாம் இந்த துரோகம் !!!

உதவ யாருக்கும் மனம் இல்லை!!
 

உதவிகளுக்கும் தொடர்ச்சி இல்லை!!!

பாதியில் உதவி  நின்ற கொடுமையுமுண்டு
 

தொடர வேண்டாம் !!!

இந்த அவல நிலை போதும் இந்த நரக வாழ்க்கை
 

இப்படிக்கு சிறுதொழில் குழந்தைகள்!!!

அவர்களின் ஏக்க அலைகள் கரையை தினமும்
 

தொட்டுக்கொண்டே தான் இருக்கிறது இன்றும்
 

என் மன கடலில் வலியுடன்

By 

Soniya Jaraika Luckshitriya

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker