Thursday, August 5, 2010

கடவுள் படைத்த சாவிகள் மூன்று

கடவுள் கொடுத்த பரிசு

அது  ரொம்பவும் சிறுசு

அதன் பயனோ பெருசு

கடவுள் படைத்த சாவிகள் மூன்று
அதை கொடுத்தார் மூவரிடம்
பூட்டோ ஒன்று அதன்
திறவுகோலோ மூன்று

நம் வாழ்கையின் முதல் சாவி
தந்தை-தாயின் கையில்
நம் வாழ்கையின் இரண்டாவது சாவி
நம் கையில்
நம் வாழ்கையின் மூன்றாவது சாவி
எமனின் கையில்

இதிலிருந்து யாரும் தப்பிக்க முடிவதில்லை
சாவி தொலையவும் வாய்ப்பில்லை
கள்ளச்சாவி உருவாக வாய்ப்பும் இல்லை
சாவிகள் ஒழுங்காய் நாம் பயன்படுத்த
இறைவனின் தூதுவர்கள் மூவருக்கும் நன்றி

By


Soniya Jaraika Luckshitriya

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker