Sunday, August 15, 2010

உன்மடி சாயத்தான் ஆசை

நீ வந்து வந்து போகிறாய்
ஏன் வருகிறாய் ஏன் செல்கிறாய்
என்று புரியவில்லை

உன் சல சலப்பும் உப்பு காற்றும் என்னை
குளிர வைக்கிறது
உந்தன் முடிவில்லா வரவு
என் நெஞ்சில் ஒரு புதிய உறவு
 உனக்கும் எனக்கும்

நம் நட்பின் ஆரம்பம்
உன்னிடம் தான் கேட்க வேண்டும்
அன்று நான் படகு சவாரி செய்தேன்
என்னையே அறியாமல் கால் தடுக்கி
மூழ்க

அம்மா என்றேன் அந்த ஒரு வார்த்தைக்காக
என்னை கரைசெற்றாய் என்ன
தாய் பாசமோ உனக்கு
அன்றில் இருந்து உன்மடி
சாயத்தான் ஆசை இந்த பேதைக்கு

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker