பளபளக்கும் வெண்மையான பால் எடுத்து வைத்தேன்!!
பாலாடைகள் தேங்கி மிதக்க அதை பார்த்து நான் ரசிக்க!!
அம்மா சொன்னார் பாலாடைகளை சேகரிக்க!!
நான் கேட்டேன் எந்த வங்கியில் நான் சேமிக்க !!
செல்லமாக கிள்ளினார் என் கன்னத்தை !!
ஐயோ என்று நான் கூவ மகளே என்று அவர் துடிக்க!!
நான் என் போக்குக்கு நடிக்க விழுந்து விழுந்து சிரிக்க !!
என் தாயும் என்னுடன் சிரிக்க!!
சேமிப்பு தொடர்ந்தது சில நாட்களாய் !!
அந்த சேமிப்பை நான் கடைய !!
வெண்ணெய் தனியாய் பிரிந்து மிதக்க !!
ஆச்சிரியத்தில் நான் பிரேமிக்க !!
அம்மா சொல்ல நான் அதை தொடர செய்தேன்!!
அடுப்பில் தீ மூட்டி வட்ட வாணலியை வைத்து !!
கடைந்த வெண்ணெய் அதில் குதித்து !!
தற்கொலை செய்ய நான் உதவினேன் !!
ஆனால் இது கொலையா தற்கொலையா !!
காவல்காரர் தான் கண்டுபிடிக்க வேண்டும் !!
அது ஒரு தனி விசாரணையும் கூட!!
வானலியில் மிதந்த வெண்ணெய் என்னை கொமட்ட!!
சிறுது நேரம் அதுக் குதிக்க நன்று கொதிக்க மணமணக்க!!
கம கமவென என்னை அது இழுக்க !!
என்னையே மறந்தேன் நான் ஏனோ !!
அம்மா வேகமாய் சென்று முருங்கை இலையை பறிக்க!!
நான் புரியாமல் நிற்க அம்மா சட்டேன்று இலையை வானலியில் கொட்ட!!
பொங்கி நுரையுடன் வந்தது ஒரு அழகிய தேவலோக மணம்!!
கமகம நெய் வாசனை வீடெங்கும் மணம் கமல !!
நாக்கில் எச்சிலும் சொட்டியது எனக்கு !!
நெய்யின் வாசம் கலந்தது எந்தன் சுவாசம்!!
அன்று முதல் !!
No comments:
Post a Comment