அழகா
அன்பா எது நிரந்தரம்
அழகு
என்பது நிரந்தரமற்ற
மேல்தோலின்
பிரதிபலிப்பு
அன்பு
என்பது உண்மையான
அக்கறையின்
வெளிப்பாடு
அழகு
வெளிப்பூச்சு போல
அன்பு
உள்ளத்தின் பாச மொழி
அழகு
அலங்கரிக்க அழகாய் மிளிரும்
ஆனால்
நீரில் கரைந்து விடும்
சாயப்பூச்சு
போல சாயம் வெளுத்துவிடும்
அன்பு
பாசமாகவும் செல்ல கோபமாய்
இருவேறு
ரூபம் கொண்டாலும்
நிரந்தரமாய்
ஜொலிக்கும்
அழகு
என்பது சிறுவயதில் தொடங்கி
இளமை
பருவத்தில் பயணித்து
சிறிய
காலமே நம்மிடம் நிலைத்து இருக்கும்
அன்பு
என்பது சிறுவயதில் தொடங்கி
இளமையிலும்
முதுமையிலும் தொடரும்
முடிவில்லாமல்
அன்பு
முடிவற்றது எல்லையற்றதும் கூட
அழகுக்கு
அன்பு ஒரு போதும் அடங்காது
அடங்கினாலும்
அது நிரந்தரமற்றது
அழகின்
சாயம் வெளுத்து போகும் தன்மை கொண்டது
ஆனால்
அன்புக்கு அழகு என்னும் மகுடம்
சூட்டப்படும்
அன்பு
புறஅழகாய் அகஅழகாய் இருவேறு பரிமாணம் பெற்று
அரியணை
ஏறும்
அழகுக்கும்
அன்புக்கும் போட்டி வைத்தால்
அன்பு
அந்த முதலிடத்தையும் தட்டி சென்றுவிடும்
ஆதலால்
ஒருவரின் தோற்றம் எப்படி இருந்தாலும்
அவரின்
அன்பு உண்மை என்றால் அழகு பெரிதாய்
தோன்றாது
அவர்
அன்பால் அழகாய் தோன்றுவார்
அப்படி
பட்டவர்களே அழகானவர்கள்
தூய
அன்பை பரிமாறுவோர் அழகர்கள்
அழகின்
வெளித்தோற்றம் எப்பொழுதுமே
அழியக்கூடிய
அமைப்பு கொண்டது
அன்பில்
அழகை காணுங்கள்
வெளிப்புற
அழகில் அல்ல
By chitrajanakiraman(Soniyajaraika)


3 comments:
Arumaiyaana pathivu
நன்றி 🙏
Alagana anbana vakiyangal… anbe enrum jeikum
Post a Comment