Tuesday, April 21, 2026

குரு கர்மா பேசுகிறேன்

 குரு கர்மா பேசுகிறேன்






கண்ணுண்டு கையுண்டு காலுண்டு காதுண்டு உயிருண்டு எனக்கு

நீ யார் உனக்குள் இருப்பது எல்லாம் என்ன, யார் ,எது ,என்று நான் அறிவேன்

நீ என்ன செய்தாய் அது நன்மையா தீமையா புண்ணியமா பாவமா

உன் சுயநினைவில் செய்தாயா தூண்டிவிடப்பட்டு செய்தாயா

உண்மையில் யார் இதற்கு உடந்தை என்பதை புட்டு புட்டு வைப்பேன்

அதற்கு நீ பொறுப்பில்லை என்றும் நான் அறிவேன்


அறியாமை என்னும் இருள் அகற்றுவேன் ஒவ்வொருவரின் நல்லொழுக்கத்திற்கு அதற்கு ஏற்ப ஞானம் என்னும் ஒளியை பரிசளிப்பேன்

அது உன்னை அடைந்தும் அதை யாரெல்லாம் அனுபவிக்க வேண்டும்

எப்படி அனுபவிக்க வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிப்பேன்


திருந்தாத உயிர்கள் திருடி வாழும் உயிர்கள் அடுத்தவரை சுரண்டி திண்ணுபவர்கள்

தன சுய லாபத்துக்குகாக நல்லோரை நிர்பந்தம் செய்யும் உயிர்களை வேரறுப்பேன்

காலம் போட்ட நற்கணக்கை விதியின் நல்தீர்ப்பைன்னாதாயத்துக்கு திருடுவோர்களை மாற்றவோர்களை தண்டிப்பேன்


அனைவர் கண்ணில் இருந்து தப்பித்தவர் இருக்கலாம்

ஆனால் என் கண்ணில் இருந்து தப்பித்தவர் இல்லை

காலம், விஞ்ஞானம், அறிவியல் வளர்ச்சி , தர்மம் ,உண்மை ,நல்லசக்தி

நவீன இறைசக்தி, தொழில்நுட்பம் ,மதிநுட்பம் , கர்மசக்தி என்ற

பலவிஷயங்கள் ஒன்று சேர்ந்து கைகோர்த்து பந்தாடும் அந்த சுழல் படை

என்னும் பூமராங்


என்ன விதைத்தாயோ அதை நீ அறுவடை செய்வாய்

கர்மா ஆராயும் அது உன் விதையா இல்லையேல்

அது தப்பான கூட்டணி விதைகளா என்று

கலப்புசாதி என்னும் செழிப்பற்ற ஹைபிரிட் விதையா


ஒவ்வொரு உயிரினம் எப்படிபட்ட பரிமாணம் வளர்ச்சி அடையும்

தீமைகள் எப்படி சிதையும் எது விளையும் எது களைகள் பறிக்கப்படும்

எந்த உயிர்க்கு சலுகை எந்த உயிர்க்கு அழுகை எந்த உயிர்க்கு அழகை

எந்த உயிர்க்கு தண்டனை எந்த உயிர்க்கு மறுபிறவி எப்படி கொடுக்க வேண்டும்

என்பதை குருவாய் இருந்து தீர்மானிப்பேன்


முக்காலமும் பயணித்து யார் எவர் என்ன செய்தார்கள் என்பதை

தனித்தனியாய் பகுத்து ஆராய்ந்து பிரித்து அதுற்கு ஏற்ற வண்ணம்

வரம் அளிப்பேன் ,தண்டிக்க வேண்டியவைகளை தண்டிப்பேன்

மன்னிக்க வேண்டியவைகளை மன்னிப்பேன்


நல்லொழுக்கம்,பவித்ரம் ,புனிதமான பரிசுத்த மனசு கொண்டயிர்கள்

புண்ணிய உயிர்கள் ,தூய அப்பாவிகள் ,நல் தூய பக்தர்களுக்கு

பக்கபலமாய் சக்தியாய் புத்தியை பாதுகாவலாய் இருப்பேன்

அவர்களின் மூச்சில் பேச்சில் உள்ளும் வெளியிலும் உயிராய் நிழலாய் இருப்பேன்


தீய பார்வைகள் தீய கயவர்கள் தீய எண்ணம் கொண்டவர்கள்

ஒழுக்கம் நெறி கெட்டவர்கள் ,பொறாமை என்னும் எண்ணத்தில் ஊறியவர்கள்

பொய்களின் வஞ்ச எண்ணம் கொண்ட வெறியர்களை,யார் யார்

என்று தனித்தனியாய் பிரித்து காட்டுவேன்

அவர்கள் பிம்பம் மற்றும் முகத்திரையை கிழிப்பேன்


தவறு ,பாவம், பிழை ,தீட்டு,அகந்தை ,கர்வம் ,ஆணவம்,தீய வெறிகள்

அனைத்தும் மற்றவர் கண்ணனுக்கு தெரியாது

எனக்கு அனைத்தும் புலப்படும் அது யார்

அவைகள் எவை எப்படிப்பட்டது என்று புட்டு வைப்பேன்



குரு கர்மா பேசுகிறேன்


கர்மா என்னும் குரு நான்

நல் முற்றும் தீய கலப்புகள்

தீகலப்படங்கள் தப்பான கலப்பிங்கள் எது எது

என்பதை படம் பிடித்து காட்டுவேன்

யார் யார் என்ன வார்த்தைகள் பேசினார்கள்

எப்படிபட்ட காட்சிகளை திருடி அதை தப்பாய் பரிமாறினார்கள்

யாரை அதில் இணைத்தார்கள் என்ன சதி செய்தார்கள்

என்று திரையில் படம்போட்டு காட்டுவேன் தண்டிப்பேன்


மனம் எண்ணம் உலகை நான் படிப்பேன்

மூளையில் இருக்கும் நம்மில் இருக்கும் ரகசிய உலகம்

கனவு லோகங்களை கைவசம் வைத்துகொள்வேன்

உண்மை எது, பொய் எது, மாயை எது, கீதை எது

என்று அழகாய் பிரித்து புலுப்படுத்துவேன்

நல்லோர் மற்றும் நல்பக்தர்களுக்கு மட்டும்

கற்பனையில் இருக்கும் நிஜங்களை செயல்படுத்துவேன்


தீயோர் கனவையும் உற்பத்தி செய்யும் சினைமுட்டைகளையும் சிதைப்பேன்


நல்லோர்க்கு வாழ ஆரம்ப புள்ளி வைப்பேன்

தீயோர்க்கு வீழ முற்று புள்ளி வைப்பேன்


இது ஒரு சிறிய அதிர்வு அடிதான்

அளவில்லா தண்டனை என்னும் கடலில்

மூழ்கி துடிக்க ஒவ்வொரு நொடியும் படபடக்க

முதல் அடியே ஆட்டம் காணும்

அளவுக்கு அடிக்கும் கொடூர அடி

மரண அடி திகில் வெடி

நல்லோர்க்கு தடுப்பை போட்ட துஷ்டர்களுக்கு

நடைப்பின ஊன சபிக்கப்பட்ட அவஸ்தைகளையும்

பாவம் செய்த பாவிகளுக்கு வெறியர்களுக்கு

கயவர்களுக்கு வஞ்சகர்களுக்கு

சித்ரவதை என்னும் கயிறில் ஆட்டி வைப்பேன்

அவைகளை நிம்மதியை கொலை செய்வேன்

நரக வேதனைகளை பரிசாய் தருவேன் சாபமாய்


ன்பு என்னும் ஊற்று

க்கமுடியா இன்ப கடல்

ஆனந்தத்தின் பெருக்கு

புதிய பாதை புதிய வாழ்க்கை

இளமை அழகு தரும் ஊற்று

நல்முன்னேற்ற வளர்ச்சி கொடுக்கும் அருவி

அதிஷ்டம் என்னும் பூந்தோட்டம்

இவை அனைத்தும்

நல்லோர்க்கு கொடுக்கும் வரம் ஆகும்


கர்மாவின் குரு பேசுகிறேன்


இப்படிக்கு

சித்ராஜானகிராமன் (சோனியாஜரைக்கா)



No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker