Tuesday, May 5, 2026

புதிய உலகின் சாவி

புதிய உலகின் சாவி 






சாவிகள் பல உள்ளது காலத்தின் கையில் 

பல உலகம் பரவி உருவாகி உள்ளது 

உலவும் உயிர்கள் பல இருக்கின்றது 

ஆனால் மரணம் என்னும் முதல் அடியை முழுமையாய் 

கடந்து பாவ சுமைகளை முழுமையாய் கழித்து 

தன் பாவ கணக்கை குறைத்தவர்கே

ஒவ்வொரு உலகத்தில் பயணிக்க

பிரபஞ்சம் அனுமதி கொடுக்கும் 


முறையான அனுமதி என்னும் அச்சாரம் பெறாமல் செய்யும் 

அனைத்து அத்து மீறலும்பெரிய பாவமாகவே கருதப்பட்டு 

நம் வாழ்க்கை என்னும்  வங்கியில் வட்டியோடு வந்து சேரும் 


ஒவ்வொரு பொருளுக்கும்  மதிப்பு இருப்பது போல் 

நாம் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் மதிப்பீடு உள்ளது 

நல்லோரின் எண்ணங்கள் படி வாழ்ந்தால் 

அவர்களுக்காக உதவ முனைந்தால் 

நாம் புண்ணியம் என்னும் எண்ணிலடங்கா வட்டியை பெறுவோம் 


நல்லோருக்கு எதிராய் எதிர்மறையாய் செயல்பட்டால் 

மகாபாவம் என்னும் வட்டி அசுர வேகத்தில் பெருகிவிடும் 

அதனால் நாம் பயணிக்கும் பாதையில் நன்மை 

என்னும் விதையை விதைக்க வேண்டும் 

அதற்கு நல்லோருக்கு அணில் போல 

இயன்ற நன்மையை செய்தால் 

காலம் நமக்கு மகா ஞானத்தை பலத்தை குடுக்கும் 


நன்மை என்னும் முதல் அடியை வைக்க 

தயக்கமில்லாமல் செயல்பட்டால் 

புண்ணியம் என்னும் வட்டி விதையாய் 

விதைக்கபடும் அது நாளை 

பெரிய புண்ணிய மரமாய் வளர்ந்து 

பற்பல நல்ற்பலனை தரும் 


பின்  ஒரு பெரிய பாதை ஜோதியுடன் தென்படும் 

நமக்கு சாவியை கொடுத்து புது உலகுக்கு 

அழைத்து செல்லும் 


புண்ணியம் என்னும் முதலீடு செய் 

நன்மையின் வழியில் செய் 

பாவம் என்னும் இருள் அகன்று 

பிரகாசம் என்னும்  ஒளியை பெற்று 

அருமையான பலனை பெற்று பல உலகில் பயணிப்பாய் 


ஒருவரின் பலனை அவரின் வாழ்க்கை சந்தோஷத்தை 

தடுத்து திருடி அனுபவித்தால் அவர்கள் செய்த பாவக்கணக்கு 

பன்மடங்காய் பெருகி தண்டையாய் மாறி உன்னை தாக்கும் 


அதனால் உன் வாழ்க்கையை நல்முறையில் வாழ் 

இல்லையேல் தொண்டு செய் உதவி செய் 

நன்மை என்னும் தீபம் ஏற்றி பாவம் என்னும்  

இருளை அகற்று 

புதிய உலகத்தின்  சாவி உன் கையில் இன்றே 


எழுதியவர் 

சித்ரஜானகிராமன் (சோனியா ஜரைக்கா )

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker