Thursday, May 7, 2026

ராணி விளையாட்டு ஆட்டம் -1(project-1)

 ராணி விளையாட்டு ஆட்டம் -1(project-1)




மூடியது முடியுது பழைய ஆட்டம்

மூன்று சாவிகளும் நவீன யுகத்தில் கலந்தது

சாவி மூன்று ஆனால் ஆட்டம் ஒன்றுதான்

எதிரியின் கோட்டையை மூடவா

தோ என்னோடு கை கோர்த்து ஆடவா


சூடு பறக்கது ஆட்டம் ஜோராய்

ஆட்டத்தின் ராணி கட்டளையிடுகிறாள்

இதோ பல சட்ட திட்டம் புதுப்பிக்கப்பட்டு

ஆட்டம் ஆரம்பிக்க தயார் ஆனது


சோதித்த காலம் முடிந்து

சாதிக்கும் காலம் ஆரம்பித்தது

ராணிக்கு யோகம் கூடியது


இப்பொது மூன்று உலகம் ஒரே

அலைவரிசையில் இணைந்தது

அவள் கொடுத்த அறிவுறுத்தல் படி

செயல்பட வேண்டும் அதனை

முழுமையாய் செயல்படுத்த வேண்டும்


வ்வாட்டம் மூன்று வழிப்பாதையில்

பயணித்து பயணப்பட வேண்டும்

ஆரம்பம் ஒரே இடத்தில் முடிவும் ஒரே இடத்தில்

ஆனால் பயணம் மட்டும் வேறு இடத்தில்


எதிராளி இடத்தில் இருக்கும் புதையல்களை சேகரித்து

ராணிக்கோட்டையில் இருக்கும் தடைகளை

தகர்த்து பொக்கிஷ அதிஷ்ட புதையலை

க்திகளை அறிவு குறிப்புகளை சேகரிக்க வேண்டும்

அதனை ராணிகோட்டையில் சமர்ப்பிக்க வேண்டும்


விளையாட்டின் கட்டளைபடியும் மற்றும்

ராணியின் கட்டளைபடியம் செயல்பட வேண்டும்

விதி மீறல் முறைக்கேடு இருந்தால்

சக்திகள்,பிறவிகள்,யுக்திகள் மற்றும்

அனைத்து வகையான சக்திகளை

ராணி திரும்ப பறித்துவிடுவாள்


ஆட்டம் ஆரம்பமாகட்டும் ஜோராய் ஆதி அந்த வேராய்

இதோ ஒவ்வொரு எந்திர பொம்மைகள் உயிர் பொம்மைகள்

இரண்டும் கைகோர்த்தும் தனித்தும் கொடுக்கப்பட்ட

இலக்கை நோக்கி அனைத்தும் பயணிக்குது

உழைப்புக்கு ஏற்ற வாழ்க்கை ,சக்திகள்

அவைகளுக்கு கொடுக்கப்படும் அந்த பொம்மைகளுக்கு

ராணி எல்லைக்குள் வந்தாலே ராணி கட்டளைக்கு டி பணிய வேண்டும்


நகராமல் அதே ஆரம்ப இடத்தில் இருக்கும் பொம்மைகள்

தண்டிக்கப்படும் என்னும் கட்டளையும் விதியும் உள்ளது

தொடர் தண்டனையா இல்லை இலக்கு நோக்கி பயணமா

ஆட்டம் சூடு பிடிக்கிறது


ராணி ஆட்டம் ஆரம்பித்தது எதிராளியின் திட்டம்

தவிடு பொடியானது மிரண்டனர் எதிராளி

முதல் சுற்று இதோ ஆரம்பம் ஆகிவிட்டது



எழுதியவர்

சித்ரா ஜானகிராமன் (சோனியா ஜாரைக்கா)

2 comments:

Mrithu said...

ராணி ஆட்டம் அற்புதம்

Soniya Jaraika Zone said...

நன்றி 🙂🥹

Protected by Copyscape Online Plagiarism Checker