அழகுக்கே அழகு சேர்ப்பது
கலையும் அழகு சேர்க்கும் அதன்
அழகு மெரருகூட்டும் போது
களைந்த கூந்தலும் அழகு அதை விரல்கள்
மெல்ல நளினாமாய் கோதும் போது
பிழையும் அழகு அந்த மழலை மொழியில்
குழந்தை பேசும் போது
ஒவ்வொரு பருவமும் அழகு
அதன் அமைப்பு நேர்த்தியாய் செதுக்கும் போது
மண் வாசனையும் அழகு
மழை துளி மண்ணில் கலக்கையில்
நம்மில் இருக்கும் மணம் நறுமணமும் அழகு
அது வியர்வை துளியோடு கலக்கும் போது
எழுதியவர்
சித்ரா ஜானகிராமன் (சோனியா ஜரைக்கா )
No comments:
Post a Comment