Thursday, January 22, 2026

நம்மால் புதிய உலகம் உதயம்

 











நம்மால் புதிய உலகம் உதயம்


என் மன்மதனே உன் ரதியடா நான்

என் காதல் ரெமோ உனக்கு ரம்பையடா நான்

நீ ராமன் என்றால் உனக்கு சீதையடா நான்

சிவன் என்றால் உன் சக்தியடா நான்

கண்ணன் என்றால் உன் ராதையடா நான்

உன்னை பின் தொடரும் நிழலும் நானே

உன் இதய துடிப்பும் நானே

உன் கனவும் நான்

உனக்குள் ஒளிந்து இருக்கும் நினைவும் நான்

உன்னில் நான் எண்ணில் நீ

நீ என்றால் நான்

நான் என்றால் நீ

உன்னில் பாதி நான்

என்னில் பாதி நீ

நாம் இரண்டற சங்கமிக்கும் போது

இரு உலகம் கலந்து

ஓர் புதிய உலகம் உருவெடுக்கும்

புதிய வடிவம் பெரும்

புது உயிர்கள் புத்துயிர் பெற்றெழும்

புதிய உலகம் உதயமாகட்டும் நம்மால்


By

சித்ராஜானகிராமன் (சோனியா ஜரைக்கா )



Protected by Copyscape Online Plagiarism Checker