Sunday, February 8, 2026

காதலும் திருமணமும் முரண் அரண்

 





காதலும் திருமணமும் முரண் அரண்

 

காதலிக்கும் காலம் காத்திருக்கும் நீண்ட நிமிடங்கள் கூட

ஒரு நொடி போன்றது

 

திருமணத்திற்கு பின் காத்திருக்கும் நீண்ட நிமிடங்கள் கூட

ஒரு யுகம் போன்றது

 

காதலிக்கும் காலம் ஊடல் இனிக்கும்

மன்னிப்பு என்பது அருமருந்தாய் இருக்கும்

 

திருமணத்திற்கக்கு பின் ஊடல் ஒரு

இடைவிடா யுத்தம் போல நீளும் ஆறா வடுவாய் தோன்றும்

 

காதலிக்கும் காலம் அவள்/அவன் பிரகாசமான ஒளி உலகம்

 

திருமணத்திற்கு பின் அவள்/அவன் தான் இருண்ட

உலகமாய் தெரிவாள்

 

இதுவே காதல் திருமண முரண்

 

ஆனால் ஒருவருக்கு ஒருவர் புரிதல் கூடி ,

ஊடலில் கூடி மனம் விட்டு பேசி திளைத்து

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு

இருவரும் விட்டு கொடுத்து

அதுவும் போட்டி போட்டு மாற்றி மாற்றி

விட்டுக்கொடுத்து காதல் கனிரசம்

மாறி மாறி ஊட்டி அன்பை பரிமாறும்

காதல் திருமண முறையே ஒரு அரண்

 

பரபரப்பான இயந்திர வாழ்க்கையிலும்

இருவரும் தனக்கான நிமிடங்களை

மாறி மாறி பரிமாறினால்

முரணே அரனாய் மாறும்

 

காதல் பந்தம் திருமணத்தால் இணைந்தாலும்

அது இந்த முறையில் வாழத்தொடங்கினால்

நமது உயிரையும் வாழ்க்கையயும்

ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியோடு புதுப்பிக்க செய்யும்

காதல் திருமண பந்தம் நீண்டு நிலைத்திருக்கும்

 

By chitrajankiraman(soniyajaraika)

 

 

4 comments:

Jana said...

Arumai arumai.. alagaha soneer

Jaraika Zone said...

thank you so much

Anonymous said...

Alagaana kaadhal super

Jaraika Zone said...

Thank you 🙂

Protected by Copyscape Online Plagiarism Checker