Friday, February 20, 2026

கிருஷ்ணாவின் புல்லாங்குழல் கானம்

 




 கிருஷ்ணா உன் புல்லாங்குழல் கானம்

கேட்கையில் உலகமே மெய் மறக்கிறது

தன்னையே மறக்கிறது

 

என் நெஞ்சமும் என் உடலும் மெய் சிலிர்க்கிறது

நான் ஏதோ ஒரு வினோத உலகத்தில்

பயணிப்பது போல் உணர்கிறேன்

 

எத்தனையோ பேர் புல்லாங்குழல் இசைக்கலாம்

ஆனால் உன் இசைக்கு மயங்காத

ரசிகர்கள் ரசிகைகள் உண்டா என்ன

 

சிறகு இல்லை பறக்கிறேன்

விண்ணை எட்டி தொடுகிறேன்

நிலவில் பயணிக்கிறேன்

சூரியனை கயிறால் கட்டி இழுக்கிறேன்

புயலை கையில் பிடித்து அடைத்து வைக்கிறேன்

நெருப்பில் தாவி தாவி விளையாடுகிறேன்

 

குயிலின் கானம் கேட்டுருக்கிறேன்

கிளிகளின் பேச்சை கேட்டுருக்கிறேன்

ஆனால் உன் புல்லாங்குழல் இசை

பசை போல என் நெஞ்சில் ஒட்டி கொண்டது

 

வேறு உலகத்துக்கு பயணப்பட வைக்கிறது

கற்பனையும் அல்ல நிஜ வாழ்க்கையும் அல்ல

இரண்டுக்கும் நடுவில் ஒரு புது கிரகத்தை கண்டேன்

 

அங்கே நான் வசிக்கவே ஆரம்பித்து விட்டேன்

அப்படி என்ன செய்தாய் கண்ணா இந்த பெண்ணை

 

இப்படிக்கு உன் ரசிகை

சித்ராஜானகிராமன் (சோனியா ஜரைக்கா )


2 comments:

Anonymous said...

Sirappu.. krishna krishna hare hare

Jaraika Zone said...

Nandri :)

Protected by Copyscape Online Plagiarism Checker